மக்களவை கூட்டத்தொடர் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் அதில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்படாமல் கூட்டத் தொடர் முடிக்கப்பட்டது. இதனால் வடகிழக்கு மக்கள் இதனை பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். இந்த கூட்ட தொடரில் இது நிறைவேற்றப்படாத நிலையில் வரும் ஜூன் மாதத்துடன் மசோதா காலாவதியாகிவிடும். இதனை கொண்டாடும் வகையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வடகிழக்கு தற்போது பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் முஸ்லிம் அல்லாத பிற மக்களுக்குக் குடியுரிமை வழங்கும் திட்டமே இந்த குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவாகும். இதற்கு ஆரம்ப முதல் வடகிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. அதனை தொடர்ந்து அசாம் மாநிலத்தில் முதல்வர் சர்பானந்தா சோனாவால் தலைமையிலான பாஜக அரசுக்கு ஆதரவு அளித்துவந்த அசாம் கன பரிசத் கட்சி இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தனது ஆதரவை விலக்கிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.