Skip to main content

கரோனா இரண்டாவது அலை: மீண்டும் ஊரடங்கா? - மத்திய அமைச்சர் விளக்கம்!

Published on 22/03/2021 | Edited on 22/03/2021
NITIN GADKARI

 

 

இந்தியாவில் கரோனாவின் இரண்டாவது அலை தற்போது ஏற்பட்டு வருகிறது. மஹாராஷ்ட்ரா, குஜராத், பஞ்சாப், மத்திய பிரதேஷ் உள்ளிட்ட மாநிலங்களில் கரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. இருப்பினும் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது.

 

இதேபோல் கடந்த வாரம் (மார்ச் 15 - 21) வரை 2.6 லட்சம் பேர் புதிதாக கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது இதற்கு முந்தைய வாரத்தை விட 67 சதவீதம் அதிகமாகும். அந்த வாரத்தில் 1.55 லட்சம் பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 43 ஆயிரத்து 846 பேருக்கு கரோனா உறுதியானது.

 

இதனையடுத்து இந்தியாவில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படாலம் என பேச்சு எழுந்தது. இந்தநிலையில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்துவது அரசின் பரிசீலனையில் இல்லை. கரோனா அதிகமுள்ள பகுதிகளில் கட்டுப்பாடுகள் தேவை என தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்