Published on 12/02/2021 | Edited on 12/02/2021
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர், "பிரதமர் மோடியை அவதூறு செய்யும் வீடியோவிற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், தனக்கு தொலைப்பேசி மூலமாக 8,500க்கும் மேற்பட்ட மிரட்டல்கள் வந்தது" என அளிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து, கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, கூகுள் நிறுவன ஊழியர்கள் மூன்று பேர் உள்பட 17 பேர் மீது உத்தரப்பிரதேச போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
விசாரணைக்குப் பிறகு, இந்த வீடியோ தொடர்பான வழக்கில் சுந்தர் பிச்சைக்கும், மற்ற கூகுள் நிறுவன ஊழியர்களுக்கும் தொடர்பில்லை எனத் தெரிய வந்ததையடுத்து, அவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் வீடியோ குறித்தும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தவருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்தும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக உத்தரப்பிரதேச போலீஸார் தெரிவித்துள்ளனர்.