Published on 05/10/2018 | Edited on 05/10/2018
வியாழன் அன்று டெல்லியில் இந்திய ரூபாயின் வீழ்ச்சிப் பற்றி ஆலோசனை கூட்டம் நடந்தது, அதில் பேசிய மத்திய தரைவழி போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதால் இந்தியா மிக பெரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக தெரிவித்தார். மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்துகொண்டு வருவதாலும் அதானால் கச்சா எண்ணெய் விலை உயர்வதாலும் நாட்டில் வர்த்தக பற்றாக்குறையும் அதிகரித்து வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.