இந்தியாவில் தொழிலாளர்களின் உயிரிழப்பு அதிகரித்து வரும் நிலையில் மனித உரிமை ஆணையம் மத்திய மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்தியாவில் வேலைக்காக மற்ற மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். சிலர் உள்மாநிலங்களில் வேலை செய்து வருகின்றனர். அப்படி வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு எதிர்பாராத விபத்துகள் காரணமாக உயிரிழப்பு ஏற்படுகிறது. அந்த வகையில் கடந்த மூன்றாண்டுகளாக விபத்துகளில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சராசரியாக ஒரு நாளைக்கு 3 தொழிலாளர்கள் இந்தியாவில் உயிரிழப்பதாகச் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளது. மேலும் தொழிலாளர்களின் பாதுகாப்புக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்க மத்திய மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.