ஆயுள் காப்பீடுத் திட்டத்தில் சேரும் முன், காப்பீடு நிறுவனத்தின் முகவர்களுக்கு, காப்பீட்டாளர்கள்தான் எல்லாமே என்பதுபோல் இருப்பார்கள். காப்பீடுத் தொகையைக் கட்டத் துவங்கியதும் கொஞ்சம் விரிசல் ஏற்படும், பிறகு காப்பீட்டாளருக்கானக் காப்பீடுத் தொகையை திரும்பப் பெறுவதற்குள், அந்தக் காப்பீடுத் தொகையே வேண்டாம் என்ற அளவிற்கு தோன்றவைப்பார்கள். இது போன்ற இன்னல்கள் எல்லாம் இனி இல்லாமல் எளிதாக வாட்ஸ் ஆப் மெசேஜ் மூலம் காப்பீடுத் தொகையை பெற்றுக்கொள்ளும் வசதியை பாரதி அக்ஸா (Bharti AXA) ஆயுள் காப்பீடு நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனத்தின் சி.இ.ஓ மற்றும் நிர்வாக இயக்குனருமான விகாஸ் சேத் (Mr Vikas Seth) "காப்பீடு நிறுவனங்களின் முக்கிய பொறுப்பு, காப்பீட்டாளர்களுக்கு சரியான நேரத்தில் அவர்களின் காப்பீட்டுத் தொகையை சென்று சேரவைப்பதுதான், அதை எளிமையாக்கத்தான் புதிதாக இந்த முறையை நாங்கள் அறிமுகம் செய்திருக்கிறோம்" என்று தெரிவித்தார். மேலும் காப்பீட்டாளர் அவர் பதிவு செய்திருக்கும் வாட்ஸ் ஆப் மொபைல் எண்ணில் இருந்து பாரதி அக்ஸா நிறுவனத்திற்கு காப்பீடு சம்பந்தமான ஆவணங்களை அனுப்பினால்,பிறகு நிறுவனத்தின் காப்பீட்டு உரிமை குழு பரிசீலித்துவிட்டு, காப்பீட்டுத் தொகையை சம்பந்தப்பட்டவர்களின் வங்கி கணக்கிற்கு பணமாற்றம் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். ஏற்கனவே இதுபோன்ற சில காப்பீட்டுத் தொகைகளை, காப்பீட்டாளர்களுக்கு வாட்ஸ் ஆப் மூலம் பணப் பரிமாற்றம் செய்துள்ளதக அறிவித்துள்ளார்.