Published on 11/12/2021 | Edited on 11/12/2021

இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்ட வங்கிகளில் ஒன்றான எஸ்.பி. ஐ, இன்று (11.12.2021) இரவு 11.30 மணியிலிருந்து அதிகாலை 4.30 மணிவரை 300 நிமிடங்களுக்கு, தங்கள் வங்கியின் இணைய வங்கி சேவை, யுபிஐ சேவை, யோனா, யோனா லைட் சேவை ஆகியவை இயங்காது என அறிவித்துள்ளது.
தொழில்நுட்ப மேம்படுத்தல் பணிகள் காரணமாக மேற்குறிப்பிட்ட சேவைகள் இன்று இரவு இயங்காது என தெரிவித்துள்ள எஸ்.பி.ஐ., சிறந்த வங்கி அனுபவத்தை வழங்க முயல்வதால் இதனைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.