Published on 12/07/2022 | Edited on 12/07/2022

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வானது ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. அந்த வகையில், இந்தாண்டிற்கான நீட் தேர்வு ஜூலை 17ஆம் தேதி நடைபெறவுள்ளது. இத்தேர்வானது தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், நீட் நுழைவுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று காலை 11.30 மணிக்கு வெளியிடப்படவுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் neet.nta.nic.in என்ற இணையதளத்தில் தங்களது ஹால் டிக்கெட்டை தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.