Skip to main content

மருதமலை முருகன் கோவிலில் வெள்ளி வேல் திருட்டு; சாமியார் வேடத்தில் வந்தவருக்கு வலைவீச்சு

Published on 03/04/2025 | Edited on 03/04/2025
Silver vel stolen from Maruthamala Murugan temple

தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலில் ஒன்றான கோவை மருதமலை முருகன் கோவிலில் வெள்ளி வேல் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை கும்பாபிஷேக விழா நடைபெற இருக்கிறது. இதனையொட்டி கடந்த ஒரு வாரமாகவே கோவிலில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கோவில் அடிவாரப் பகுதியில் உள்ள தியான மண்டபத்தில் சுமார் இரண்டரை அடி உயரத்தில் நான்கு லட்சம் ரூபாய் மதிப்புடைய வெள்ளி வேல் வைக்கப்பட்டிருந்தது.

திடீரென அந்த வேல் காணாமல் போன நிலையில் போலீசாருக்கு புகார் கொடுக்கப்பட்டது. புகார் அடிப்படையில் தியான மண்டபத்தின் உள்ளே இந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த பொழுது சாமியார் வேடமிட்ட நபர் ஒருவர் வெள்ளி வேலை திருடிச் சென்றது தெரியவந்தது. இது தொடர்பாக வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து வெள்ளி வேலை திருடிச் சென்ற நபர் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்