Skip to main content

பிரமோஷனெல்லாம் வேணாம்... பியூனாவே இருக்கேன் என்றவருக்கு 10 கோடிக்கு மேல் சொத்து சேர்ந்தது எப்படி?

Published on 02/05/2018 | Edited on 02/05/2018
narasimha reddy andhra


ஆந்திரா மாநிலம் நெல்லூர் மாவட்ட போக்குவரத்து கழக துணை கண்காணிப்பளர் அலுவலகத்தில் பியூனாக பணியாற்றி வருபவர் நரசிம்ம ரெட்டி (53). மாதம் 40 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் நரசிம்மரெட்டி, தனக்கு பதவி உயர்வு வேண்டாம் என்று மறுத்து 34  ஆண்டுகளாக உதவியாளராகவே பணியாற்றி வந்துள்ளார். ஆனால் இவர் மீது, வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்திருப்பதாக புகார் எழுந்தது.

 

narasimha reddy andhra


இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் நேற்று இவரது வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத ரூ.7 லட்சம் ரொக்கப்பணம், 2 கிலோ தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள், ரூ.20 லட்சம் வங்கி கணக்குகள் மற்றும் பிளாட் வாங்கியதற்கான சொத்து ஆவணங்கள் வைத்திருந்ததை பறிமுதல் செய்தனர். அவர் வாங்கிய அனைத்து குடியிருப்புகளும் 250 சதுர மீட்டர் பரப்பளவில் இருந்தன. இவ்வாறு அவருக்கு 18 வீடுகள் உள்ளன. 

 

narasimha reddy andhra


ரூ.1 கோடி மேலான எல்ஐசி எடுத்து உள்ளார். மற்றும் 50 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. சொத்துக்கள் இவரது  மனைவி மற்றும் உறவினர்கள்  பெயரில் வாங்கப்பட்டு உள்ளன. பெரும்பாலும் அவரது மனைவி ஹரிபிரியா மற்றும் அவரது தாயார் நாராயணம்மா பெயரில் வாங்கப்பட்டு உள்ளது. 

இவற்றின் மதிப்பு ரூ. 10 கோடி என கூறப்படுகிறது. சாதாரண பியூனுக்கு இவ்வளவு சொத்து வந்தது குறித்து விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் ஆந்திரா மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்த் திருவிழா; மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Andhra Pradesh Kurnool car festival incident

தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.

ஆந்திர பிரதேசம் மாநிலம் கர்னூல் மாவட்டம் சின்ன தெகூர் கிராமத்தில் நடந்த உகாதி விழாவையொட்டி ஆஞ்சநேயர் கோயிலில் தேர்த் திருவிழா நடைபெற்றது. அப்போது தேர் மீது வயர் உரசி தேரில் மின்சாரம் பாய்ந்துள்ளது. இந்த விபத்தில் மின்சாரம் தாக்கியதில் 15 குழந்தைகள் காயமடைந்தனர். இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக குழுந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை கர்னூல் கிராமப்புற காவல் நிலைய காவலர் கிரண் குமார் உறுதிப்படுத்தியுள்ளார். தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் படுகாயமடைந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக கடந்த மார்ச் மாதம் 8 ஆம் தேதி (08.03.2024) ராஜஸ்தான் மாநிலம் கோட்டா அருகில் உள்ள காளிபஸ்தி என்ற இடத்தில் சிவராத்திரி விழா முன்னேற்பாடுகள் நடைபெற்று வந்தன. அங்கிருந்த சிறுவர்கள் கலசத்தில் தண்ணீர் எடுக்கச் சென்றுள்ளனர். அப்போது சிறுவர்கள் எடுத்துச் சென்ற கொடி கட்டிய இரும்புக் குழாய், உயரழுத்த மின்கம்பி மீது உரசியது. இதனால் சிறுவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் 17 சிறுவர்கள் படுகாயமடைந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

சென்னை அருகே நிலநடுக்கம்!

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Earthquake near Chennai

சென்னை அருகே லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே இன்று (14.03.2024) இரவு 8.43 மணியளவில் 3.9 ரிக்டர் அளவில் நில அதிர்வு பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.  அதாவது திருப்பதியிலிருந்து கிழக்கு வடகிழக்கு திசையில் 58 கி.மீ. தொலைவில் 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. சென்னை அருகே உள்ள கும்மிடிப்பூண்டி மற்றும் சூலூர் பேட்டை ஆகிய சுற்றுப் பகுதியில் இந்த நில அதிர்வு உணரப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.