Skip to main content

அரசியலில் மோடி... விளையாட்டில் கோலி, தோனி... ட்விட்டர் வெளியிட்ட டாப் பதிவுகள்...

Published on 10/12/2019 | Edited on 10/12/2019

2019 ஆம் ஆண்டு விரைவில் முடிவடைய உள்ள நிலையில், இந்த ஆண்டில் இந்திய அளவில் அதிகம் பகிரப்பட்ட ட்வீட்டுகள் குறித்து ட்விட்டர் இந்தியா பக்கம் தகவல் வெளியிட்டுள்ளது.

 

most retweeted tweet of 2019

 

 

அதன்படி பிரதமர் நரேந்திர மோடியின் மக்களவை தேர்தல் வெற்றி குறித்த ட்வீட் தான் இந்த ஆண்டு இந்தியாவில் அதிக லைக்குகள் வாங்கிய ட்வீட்டாக பெயர் எடுத்துள்ளது. மக்களவை தேர்தல் வெற்றிக்கு பிறகு, "ஒன்றாக நாம் வளர்கிறோம். ஒன்றாக நாம் செழிப்போம். ஒன்றாக நாம் ஒரு வலுவான மற்றும் உள்ளடக்கிய இந்தியாவை உருவாக்குவோம். இந்தியா மீண்டும் வெற்றி பெறும்!" என பிரதமர் மோடி ட்வீட் செய்திருந்தார். இந்த ட்வீட் 4,21,100 லைக்குகளை பெற்றுள்ளது. இதுவே இந்தியாவில் அதிகப்படியாக லைக் செய்யப்பட்ட ட்விட்டர் பதிவு ஆகும்.

அதேபோல விளையாட்டு உலகை பொறுத்தவரை, தோனியின் பிறந்தநாளுக்கு கோலி செய்த ட்வீட் தான், அதிகம் லைக் செய்யப்பட்ட ட்வீட்டாக உள்ளது.  கோலியின் அந்த ட்வீட்டில் “ பிறந்த நாள் வாழ்த்துகள் மஹி பாய். ஒரு சிலரால் மட்டுமே நம்பிக்கை மற்றும் மரியாதையின் அர்த்ததை முழுமையாக உணர முடியும். அதில் ஒருவரான உங்களை நான் நீண்ட வருடங்களாக நண்பராக பெற்றிருக்கிறேன். நீங்கள் அனைவருக்கும் மிகச் சிறந்த சகோதரர். நான் சொன்னதைப் போல் எப்போதும் என்னுடைய கேப்டன் நீங்கள்தான் “ என எழுதி, அதோடு இருவரும் நடந்து வரும் புகைப்படத்தையும் இணைத்திருந்தார். இந்த ட்வீட் 4,12,700 லைக்குகளை பெற்றது. இவை இரண்டும் தான் இந்த ஆண்டு ட்விட்டரில் அதிகம் லைக்குகள் வாங்கிய ட்வீட்டுகள் என ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது. 

 

 

 

 


 

சார்ந்த செய்திகள்