கேரளாவில் கனமழை எச்சரிக்கை விட்டிருந்த நிலையில், தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பெரும்பாலான மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேரளா மாநிலத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களிலும் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேற்கு கடற்கரை பகுதிகளில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலவி வருகிறது. எனவே கேரளாவின் பெரும்பாலான மாவட்டங்களில் 3 ஆம் தேதி வரை மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த குழுவினர் கேரளா மாநிலத்திற்கு விரைந்துள்ளனர். தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த வீரர்கள் கோழிக்கோடு, பத்தனம்திட்டா, மலப்புரம், ஆலப்புழா, இடுக்கி, திருச்சூர் மற்றும் வயநாடு ஆகிய மாவட்டங்களில் முகாமிட்டு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.