இன்றைய தலைமுறை இளைஞர் தாய்மொழி மட்டுமல்லாமல் கூடுதலாக ஒன்று அல்லது இரண்டு மொழிகளை கற்று வருவதாக புள்ளி விவரம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நகரங்களில் வசிக்கும் 15 முதல் 49 வயதுக்கு உட்பட்டவர்களில் 50 சதவீதம் பேர் இரு மொழி பேசுகின்றனர். அதே வயதுக்கு உட்பட்டவர்களில் கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள் 25 சதவீதம் பேர் இருமொழி பேசுகின்றனர். மொத்த மக்கள் தொகையில் 25 சதவீதம் பேர் இரு மொழி பேசுபவர்களாகவும், 7 சதவீதம் பேர் மும்மொழி பேசுபவர்களாகவும் உள்ளனர். இரு மொழி பேசுபவர்கள் நகரங்களில் 44 சதவீதம் பேரும், கிராமங்களில் 22 சதவீதம் பேரும், மும்மொழி பேசுபவர்கள், நகரங்களில் 15 சதவீதம் பேரும், கிராமங்களில் 5 சதவீதம் பேர் உள்ளனர். 14 வயதுக்கு உட்பட்டவர்களில் கிராமம், நகரம் என்று அவ்வளவு பெரிய வித்தியாசம் இல்லை. 15 வயதுக்கு மேல் தான் வித்தியாசம் உள்ளது. இந்த வித்தியாசத்திற்கு காரணம் வேலைக்காக வெளியூர் செல்வதும், வேலைக்காக வேறு மொழிகளை கற்பது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது..
Published on 07/11/2018 | Edited on 07/11/2018