மஹாராஷ்ட்ரா மாநிலம் பீட் மாவட்டத்தில் உள்ள மஜல்கானில், குரங்குகள் பழி வாங்கும் விதமாக, ஒரே மாதத்தில் 250 நாய்களை கொன்றுள்ளதாக லோக்மத் என்ற மராத்தி மொழி பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த பத்திரிகையிடம் பேசியுள்ள கிராமத்தினர், ஒரு நாய் குட்டி குரங்கு குட்டியை கொன்றுவிட்டதாகவும், அதனைத்தொடர்ந்து குரங்குகள் நாய் குட்டிகளை உயரமான இடத்திற்கு இழுத்து சென்று தூக்கி எரிந்து கொன்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் தற்போது கிராமத்தில் நாய்களே இல்லாத நிலை ஏற்பட்டுள்ள நிலையில், குரங்குகள் தற்போது பள்ளி செல்லும் குழந்தைகளையும் தாக்க தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
குரங்குகள் அச்சுறுத்தலை தொடர்ந்து, வனத்துறையிடம் புகாரளித்ததாக கூறியுள்ள கிராமத்தினர், வனத்துறை அதிகாரிகள் ஒருநாள் வந்ததாகவும், ஆனால் ஒரு குரங்கை கூட பிடிக்கமுடியாமல் திரும்ப சென்றதாகவும் தெரிவித்துள்ளனர். ஆவியை விட மோசமான பாவியா இருக்கும் போலயே இந்த குரங்குகள் என எண்ணத்தைத்தான் இந்த சம்பவம் ஏற்படுத்தியிருக்கிறது.