வரும் திங்கள்கிழமை முதல் கொச்சியில் விமான சேவை தொடங்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
கேரளாவில் இதுவரை வெள்ளத்தினாலும், நிலச்சரிவினாலும் 300 பேருக்கு மேற்பட்டோர் பலியாகி உள்ளதாக கேரளா முதல்வர் தெரிவித்துள்ளார். மேலும் மீட்பபுப்பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். கேரளாவில் கனமழை காரணமாக 33 அணைகள் திறக்கப்பட்டுள்ளதாகவும், 13 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் மீட்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 21 குழுக்களாக மீட்புக்குழுவினர்கள் பிரிந்து மீட்புப்பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில் கொச்சி விமானநிலையத்தில் வெள்ளநீர் சூந்துள்ளதால் விமானசேவை ஆகஸ்ட் 26-ஆம் தேதிவரை நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டநிலையில் தற்போது வரும் திங்கள்கிழமை முதல் கொச்சி கடற்படை விமான ஓடுதளம் பயணிகள் விமான சேவைக்கு பயன்படுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.