Published on 02/08/2019 | Edited on 02/08/2019
ஆசியாவின் நோபல் பரிசு என கருதப்படும் ரமோன் மகசேசே விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் இந்திய ஊடகவியலாளர் ரவீஷ் குமாருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டின் மூன்றாவது அதிபராக இருந்த, மறைந்த ரமோன் மகசேசே பெயரில் கடந்த 1957 ஆம் ஆண்டு முதல் இந்த மகசேசே விருது வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி, ஆசியாவில் உள்ள நாடுகளில் சுயநலமில்லாமல் மக்களுக்கான பொதுநல பணி, சமூகப் பணி உள்ளிட்டவைகளில் ஈடுபடுவோரை கவுரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் இந்த விருதுகள் வழக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான மகசேசே விருதுக்கு இந்திய ஊடகவியலாளர் ரவீஷ் குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் குரலற்ற மக்களின் குரலாகவும், மக்களின் பிரதிநிதியாகவும் செயல்பட்டதாக தேர்வுக்கமிட்டி குறிப்பிட்டுள்ளது.