Skip to main content

காங்கிரஸைப் பற்றி பேசியது போதும்.. குஜராத் பற்றியும் மோடி பேசவேண்டும்! - ராகுல்காந்தி

Published on 05/12/2017 | Edited on 05/12/2017
காங்கிரஸைப் பற்றி பேசியது போதும்.. குஜராத் பற்றியும் மோடி பேசவேண்டும்! - ராகுல்காந்தி

மோடி தனது உரை முழுவதும் காங்கிரஸைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பதாகவும், குஜராத்தைப்  பற்றியும் பேசவேண்டும் எனவும் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.



குஜராத் சட்டமன்றத் தேர்தல் தேதி நெருங்கிவிட்டது. பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டு பிரதான கட்சிகளும், அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. பாஜக சார்பில் பிரதமர் மோடி ஓய்வில்லாமல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். 

அவரது பிரச்சாரம் குறித்து விமர்சித்துள்ள காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி, ‘நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் பாஜகவிற்கு மோடியின் உரையைக் கேட்க நேர்ந்தது. அவர் பேசியதில் 60%-க்கும் அதிகமாக என்னைப் பற்றியும், காங்கிரஸைப் பற்றியுமே குறிப்பிடுகிறார். இந்தத் தேர்தல் முற்றிலும் குஜராத் மக்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப் போகிறது. ஆனால், மோடி இங்கிருக்கும் மக்களைப் பற்றியும், அவர்களது எதிர்காலத்தைப் பற்றியும் ஏன் வாய்திறக்க மறுக்கிறார்? காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியின் மூலமே மக்களுக்கு வளமான எதிர்காலத்தைக் கொடுக்க முடியும். மோடி தனது ஒவ்வொரு உரையிலும் பேசுவதற்கு ஒன்றும் கிடைக்காமல், எங்களைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது. அவர் குஜராத் மக்களைப் பற்றியும் கொஞ்சம் பேசியிருக்கலாம்’ என தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்