நேற்று மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வெற்றிபெற்ற பின் பிரதமர் மோடி, உத்திரப்பிரேதசத்தில் உள்ள ஷாஜஹான்பூரில் கிஷான் கல்யாண் என்ற விவசாயிகளின் கூட்டத்தில் கலந்துகொண்டார். ஒரு மாதத்திற்குள்ளாக மூன்றாவது முறை உபி வந்துள்ளார். மேலும் உபியில் இருந்து 80 எம்பிகளை கொண்டுள்ளது, பாஜக. இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியதாவது.
"எதிர்க்கட்சிகளின் பார்வை எல்லாம் மக்கள் மீது அல்ல, பிரதமர் இருக்கையின் மீதுதான். மக்களவையில் என்ன செய்தீர்கள் என்று மக்கள் கேட்டால் எதாவது ஒன்றை சொல்லி சமாளிக்கும் நிலையில்தான் எதிர்க்கட்சிகள் இருக்கின்றன. ஒரு கட்சியுடன் இன்னொரு கட்சி, மேலும் பல காட்சிகள் ஒன்றாக சேர்க்கிறது. அது ஒரு சதுப்புநிலம் நிலமாக காட்சியளிக்கிறது. அந்த சதுப்புநிலம் தாமரைக்கு சாதமாக இருக்கும். பாஜகவின் சின்னம்" தாமரை என்றெல்லாம் பேசினார்.
மேலும்," நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கான காரணத்தை கேட்டோம், அவர்களால் தக்க பதிலளிக்க முடியாமல் தேவையற்ற அணைப்பையே கொடுக்கமுடிந்தது.இதற்காக எனது கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.