Published on 24/10/2020 | Edited on 24/10/2020
வேளாண்மைத்துறை, சுற்றுலாத்துறை, மருத்துவத் துறைகளுக்கான வளர்ச்சித் திட்டங்களைக் குஜராத் மாநிலத்திற்காகப் பிரதமர் மோடி இன்று காணொளிக் காட்சி மூலம் தொடக்கி வைத்தார்.
காணொளிக் காட்சி மூலம் குஜராத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்றார். இதில் விவசாயிகளுக்கு உதவும் வகையில், காலை 5 மணி முதல் இரவு 9 மணிவரை தொடர்ந்து மின்சாரம் வழங்கும் விதமாக 'சூர்யோதயா யோஜனா' திட்டத்தைத் துவங்கி வைத்தார். இத்திட்டத்தின் மதிப்பு ரூ.3,500 கோடி ஆகும். இதனைத் தொடர்ந்து அகமதாபாத்திலுள்ள ஐ.நாவின் 'மேத்தா இருதவியல் மற்றும் ஆராய்ச்சி மைய'த்திலுள்ள குழந்தைகள் இருதய மருத்துவமனை பிரிவைத் திறந்து வைத்தார். பின்னர், சுற்றுலாத்துறை மேம்பாட்டிற்காக, மலைக்காட்சிகளை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிக்க உதவும் ரோப் கார்களை அறிமுகம் செய்துவைத்தார்.