ரூ.2290 கோடி மதிப்பிலான நவீன ஆயுதங்களை அமெரிக்காவிடம் இருந்து கொள்முதல் செய்வதற்கு பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
லடாக் எல்லைப்பகுதியில் சீனாவின் தொடர் அத்துமீறல் காரணமாக இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் அதிகரித்து வரும் சூழலில், இந்திய ராணுவத்தைப் பலப்படுத்தும் பணிகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. இதற்காக, ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் ஆயுதங்கள் வாங்குவது தொடர்பான முடிவுகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. அந்தவகையில், ரூ.2290 கோடி மதிப்பிலான நவீன ஆயுதங்களை அமெரிக்காவிடம் இருந்து கொள்முதல் செய்வதற்கு பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், இந்திய கடற்படை மற்றும் விமானப்படைக்கு ரூ.970 கோடியில் இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் ஆயுதங்கள் வாங்கவும், ராணுவத்திற்கு ரூ.780 கோடியில் 72 ஆயிரம் சிக் சாயர் தானியங்கி துப்பாக்கிகளை வாங்கவும், ரூ.540 கோடிக்கு நிலையான எச்.எப். ட்ரான்ஸ் ரிசீவர் கருவிகள் வாங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.