நிர்பயா குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, "நீதி நிலைநாட்டப்பட்டது" எனத் தெரிவித்துள்ளார்.
நிர்பயா வழக்கில் நான்கு குற்றவாளிகளுக்குத் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டாலும், அவர்கள் தாக்கல் செய்த மனுக்களால் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்படும் தேதி மூன்று முறை மாற்றிவைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை குற்றவாளிகள் நான்கு பேருக்கும் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டது.
ஏழு ஆண்டு சட்டப்போராட்டத்திற்கு பிறகு இன்று நிறைவேற்றப்பட்டுள்ள இந்த தண்டனை குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, "நீதி நிலைநாட்டப்பட்டது. பெண்களின் கண்ணியத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வது மிக முக்கியமானது. நமது பெண்கள் ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்குகிறது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து பெண்கள் முன்னேற்றத்தில் கவனம் செலுத்துகின்ற, அவர்களுக்கான சமத்துவம் மற்றும் வாய்ப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கிற ஒரு தேசத்தைக் கட்டியெழுப்ப வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.