
ஆட்டுக் கறி சமைக்க மறுத்ததாகக் கூறி மனைவியைக் கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம், மஹபூபாபாத் பகுதியில் வசித்து வருபவர் மலோத் கலாவதி (35). இவருக்கு திருமணமாகி இருந்தது. இந்த நிலையில், கலாவதியின் கணவர் தனக்கு ஆட்டுக் கறி சமைத்து தரும்படி கூறியுள்ளார். இதற்கு கலாவதி மறுப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், கலாவதிக்கும் அவருடைய கணவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த கலாவதியின் கணவர், கலாவதியை சரமாரியாக அடித்தே கொடூரமாகக் கொலை செய்துள்ளார். இதனையடுத்து, கலாவதியின் தாயார் இச்சம்பவம் குறித்து போலீசிடம் தகவல் தெரிவித்தார். தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், கலாவதியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கலாவதியின் கணவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.