Skip to main content

புதிய கார்களை வாடிக்கையாளர்களிடம் இருந்து திரும்பப் பெறுகிறது மாருதி நிறுவனம்!

Published on 26/07/2018 | Edited on 26/07/2018

 

car

 

 

இந்தியாவின் முன்னணி கார் நிறுவனமான மாருதி சுஸுகியின் 56.21% பங்குகள் ஜப்பான் நிறுவனமான சுசூகி மோட்டார் கார்பரேஷன் வசம் உள்ளது. இந்தியாவில் மட்டும் மூன்று உற்பத்தி தொழிற்சாலைகள் உள்ளன. குர்கோனில் இரண்டு, குஜராத்தில் ஒன்று  என மூன்று உற்பத்தி தொழிற்சாலைகளில் வருடத்துக்கு பதினேழு லட்சத்திற்கும் மேற்பட்ட கார்களை உற்பத்தி செய்கிறது. இந்தியாவில் கிட்டத்தட்ட 1500 நகரங்களில் விற்பனையகங்களைக் கொண்டுள்ளது. இந்நிறுவனம் மொத்தம் 12 ரகங்களில் கார்களை உற்பத்தி செய்கிறது. அதில் 8வது ரகமாக 'ஸ்விப்ட்'டையும் , 9வது ரகமாய்  டிசையரும் வெளியிட்டது. ஹூண்டாய் மற்றும் டாடா நிறுவனங்கள்தான்  இதன் முக்கிய போட்டியாளர்கள்.

 

 


மாருதி சுஸுகி நிறுவனம் தனது புதிய  1279  கார்களை வாடிக்கையாளர்களிடம் இருந்து தானாக திரும்பப் பெறுவதாக  25 ஜூலை 2018 அன்று அறிவித்துள்ளது. இதில் 566 கார்கள் புதிய ஸ்விப்ட் மற்றும் 713 கார்கள் புதிய டிசையர் ரகங்கள் . திரும்பப் பெற்று இருக்கும் வாகனங்கள் அனைத்தும் 7 மே 2018 முதல் 5 ஜூலை 2018 வரை உற்பத்தி செய்யப்பட்டவை. இது தொடர்பாக மாருதி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. "மாருதி கார்கள் சிலவற்றில் பாதுகாப்பு உபகரணமான காற்றுப் பையில் (air bag) கோளாறு இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த சமயத்தில் உற்பத்தி செய்யப்பட்ட பிற கார்களிலும் அந்தக் கோளாறு இருக்க வாய்ப்பு இருப்பதால் உற்பத்தி செய்யப்பட்ட கார்கள் திரும்பப் பெறப்படுகிறது, மேலும் இது மாருதி டீலர்களின் மூலம் திரும்பப் பெறப்பட்டு இலவசமாக பழுது பார்த்து தரப்படும், இந்த பணி ஜூலை 25 முதல் துவங்கும்" என்று அறிவித்தார்.   

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘தி ரைஸ் எழுமின்’ அமைப்பு நடத்தும் மாநாட்டிற்கான பொது அழைப்பு (படங்கள்)

Published on 06/03/2024 | Edited on 06/03/2024

 

‘தி ரைஸ் எழுமின்’ அமைப்பு நடத்தும் 13-வது உலகத் தமிழ் தொழிலதிபர்கள் மற்றும் திறனாளர்கள் மாநாடு வரும் ஜூன் மாதம் 7,8,9 நாட்களில் சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் நடைபெறுகிறது. ‘தி ரைஸ் எழுமின்’ அமைப்பு நடத்தும் ‘தி ரைஸ் டாவோஸ்’ மாநாட்டில் பங்கேற்றுப் பயன்பெற விரும்புவோர் www.tamilrise.org என்ற இணைய தளம் வழியாகவோ, +91 9150060032, +91 9150060035 எண்களுக்குத் தொடர்பு கொண்டோ பதிவு செய்யலாம். இம்மாதம் 31-ம் தேதிக்குள் பதிவு செய்பவர்களுக்கு 30% பதிவுக் கட்டணச் சலுகை தரப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது. டாவோஸ் மாநாட்டிற்கான பொது அழைப்பு இன்று (06-03-24) வெளியிடப்பட்டது. இச்சந்திப்பில் 'தி ரைஸ்' அமைப்பின் நிறுவனர் தமிழ்ப் பணி ம. ஜெகத் கஸ்பர், அனைத்துலகத் தமிழ்ப் பொறியாளர் பேரவைத் தலைவர் திரு. கிருஷ்ணா ஜெகன், உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

Next Story

தமிழகத்தில் கால் பதிக்கும் 'அடிடாஸ்'

Published on 04/01/2024 | Edited on 04/01/2024
 'Adidas' to set foot in Tamil Nadu

தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன துறையின் வளர்ச்சிக்கு தமிழக அரசு கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வரும் ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடைபெறவிருக்கிறது. இந்த மாநாட்டிற்கான இலச்சினையை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

வரும் ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடைபெறும் இந்த மாநாட்டில் தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காக வெளிநாடுகளில் இருந்து ஏராளமான தொழிலதிபர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். மேலும், பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாக உள்ளது. இந்த மாநாட்டையொட்டி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அரங்கங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கான ஆயத்தப்பணிகளை தற்போது தமிழக தொழில்துறை செய்து வருகிறது.

இந்நிலையில், பிரபல நிறுவனமான 'அடிடாஸ்' முதல் முறையாக தமிழகத்தில் சென்னையில் கால்பதிக்க இருக்கிறது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னையில் நடக்கும் உலக முதலீட்டாளர் மாநாட்டில் கையெழுத்தாக உள்ளது. சீனாவுக்கு பிறகு அடிடாஸ் நிறுவனம் ஆசியாவிலேயே இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் கால்பதிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.