
பிரதமர் மோடிக்கு மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி மாம்பழங்களைப் பரிசாக அனுப்பி வைத்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் அதிக ருசி கொண்ட பல்வேறு வகையான மாம்பழங்கள் விளைவிக்கப்பட்டு வருகின்றன. இந்த வகையான மாம்பழங்களை மேற்கு வங்க முதல்வராக இருந்து வரும் மம்தா பானர்ஜி குடியரசுத் தலைவர் மாளிகை, பிரதமர் அலுவலகம் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்பி வருகிறார். இவர் கடந்த 12 ஆண்டுகளாகத் தொடர்ந்து இதனைச் செய்து வருகிறார்.
அந்த வகையில் இந்த ஆண்டும் 4 கிலோ எடை கொண்ட பெட்டியில் மாம்பழங்கள் கொல்கத்தாவில் இருந்து பிரதமர் மோடிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த பெட்டியில் ஹிம்சாகர், பஸ்லி மற்றும் லட்சுமண்பாக் வகையான மாம்பழங்களைப் பரிசாக அனுப்பி வைத்துள்ளார். மேலும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் ஆகியோருக்கும் மம்தா பானர்ஜி இந்த ஆண்டு மாம்பழப் பெட்டிகளைப் பரிசாக அனுப்பி உள்ளார்.