Skip to main content

“பா.ஜ.க எவ்வளவு முயன்றாலும் வெற்றி பெற முடியாது” - மல்லிகார்ஜூன கார்கே

Published on 18/11/2023 | Edited on 18/11/2023

 

 Mallikarjun Kharge crictized bjp in rajasthan

 

தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களின் தேர்தல் தேதியைக் கடந்த அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி அன்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பிருந்தே இந்த ஐந்து மாநிலங்களிலுமே அரசியல் கட்சிகள் தீவிரமாகத் தங்கள் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வந்தனர். சில இடங்களில் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், மிசோரம் ஆகிய மாநிலங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

 

அதன்படி, ராஜஸ்தான் மாநிலத்தில் வருகிற நவம்பர் 25 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று டிசம்பர் 3ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவிருக்கிறது. இந்த மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்தலில் வெற்றி பெற காங்கிரஸும், பா.ஜ.க.வும் மும்முரமாகச் செயல்பட்டு வருகின்றன. 

 

இதையொட்டி, ராஜஸ்தானில் பாரத்பூர் மாவட்டத்தில் காங்கிரஸ் சார்பில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் இன்று (18-11-23) நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, “பிரதமர் மோடி எவ்வளவு முயற்சி செய்யலாம். ஆனால், ராஜஸ்தானில் காங்கிரஸ் தனது ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளும். பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாகவும், ஏழைகளை மேலும் ஏழைகளாகவும் ஆக்குவதை நோக்கமாகக் கொண்டு பா.ஜ.க செயல்படுகிறது. பா.ஜ.க தனது நண்பர்களின் நலனுக்காக மட்டுமே செயல்படுகிறது. காங்கிரஸோ ஏழைகள், விவசாயிகள் மற்றும் இளைஞர்களுக்காகப் பாடுபடுகிறது” என்று கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்