கேரள மாநிலம் சபரிமலையில் இன்று ஐயப்பன் கோவிலில் மகரஜோதி தரிசனம் நடைபெற இருப்பதால் பக்தர்கள் அதிகப்படியாக குவிந்துள்ளனர்.
கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் கார்த்திகை மாதம் முதலே ஐயப்ப பக்தர்கள் மாலையிட்டு விரதம் இருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அண்மையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு அதனால் அதிக நேரம் காக்க வைக்கப்பட்ட பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவங்களும் நிகழ்ந்து இருந்தது. அதனைத் தொடர்ந்து கேரள அரசும் சபரிமலை கோவில் தேவஸ்தானமும் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தது. தற்போது சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஐயப்பன் சிலைக்கு தங்க ஆபரணம் அணிவிக்கப்பட்டு மகரஜோதி ஏற்றப்பட உள்ளது. இதன் காரணமாக அங்கு அதிகப்படியான பக்தர்கள் மகரஜோதி தரிசனம் காண குவிந்தனர்.
தற்போது பொன்னம்பல மேட்டில் மகர ஜோதி ஏற்றப்பட்ட நிலையில் பக்தர்கள் 'சரணம் ஐயப்பா... சரணம் ஐயப்பா...' என விண்ணதிர கோஷம் எழுப்பினர்.