நாடு முழுவதும் தற்போது கடுமையான குளிர் நிலவி வரும் சூழ்நிலையில், வட மாநிலங்களில் இதுவரை இல்லாத அளவிற்கு வரலாறு காணாத வகையில் குளிர் நிலவி வருகிறது. புதுதில்லி, பஞ்சாப், உத்தரபிரதேசம், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட இடங்களில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. இரவு நேரங்களில் சில மாநிலங்களில் குளிர் 10 டிகிரி வரை இருக்கின்றது. குறிப்பாக புதுதில்லியில் முன் எப்போது இல்லாத அளவில் குளிர் வாட்டி வதைக்கிறது. நேற்று உச்சகட்டமாக 2 டிகிரி செல்சியஸ் வரை குளிர் இருந்துள்ளது. இதுவரை வட மாநிலங்களில் குளிரின் காரணமாக 60 பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், ஒடிசா மாநிலத்தில் சாலாகோன் மற்றும் நெற்குந்தி ரயில் நிலையங்களுக்கு இடையே சரக்கு ரயில் மீது லோக் மானியா திலக் எக்ஸ்பிரஸ் மோதியதில் 8-க்கும் மேற்பட்ட பெட்டிகள் தடம் புரண்டுள்ளது. இந்த விபத்தில் 40 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் லோக்தா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று காலை 7.26 மணிக்கு இந்த விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். பனிமூட்டம் காரணமாக சரக்கு ரயில் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதியிருக்க வாய்ப்பு இருப்பதாக ரயில்வே உயரதிகாரிகள் தெரிவித்துள்ளா்ாகள்.