Published on 17/09/2021 | Edited on 17/09/2021

இந்தியாவில் கேரள மாநிலத்தில் தான் தினசரி கரோனா பாதிப்புகள் அதிகமாக இருந்து வருகிறது. இருப்பினும் செப்டம்பர் முதல் வாரத்தில் அம்மாநிலத்தில் 30 ஆயிரமாக இருந்து வந்த தினசரி கரோனா பாதிப்பு, படிப்படியாக 15 ஆயிரமாகக் குறைந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் கேரளாவில் 17,681 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து நேற்று அம்மாநிலத்தில் 22,182 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியானது. இந்தநிலையில் இன்றும் கேரளாவில் கரோனா பாதிப்பு 20 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
கேரளாவில் இன்று மட்டும் 23,260 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. மேலும் கரோனாவால் பாதிக்கப்பட்ட 131 பேர் உயிரிழந்துள்ளனர்.