Skip to main content

டாஸ்மாக் கடைகளில் முதல்வர் படத்தை ஒட்டிய பா.ஜ.க. மகளிர் அணியினர்!

Published on 20/03/2025 | Edited on 20/03/2025

 

BJP women team pasted the CM mk stalin picture on TASMAC shops

அனைத்து அரசு அலுவலகங்களிலும் முதல்வர் மு.க. ஸ்டாலின் படம் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசு டாஸ்மாக் கடைகளில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் படம் இல்லாததைக் கண்டித்தும், டாஸ்மாக் கடைகளைத் தடை செய்ய வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் பா.ஜ.க. சார்பில் டாஸ்மாக் கடைகளில் முதல்வர் மு.க. ஸ்டாலின் படத்தை ஒட்டும் போராட்டம் நடந்து வருகிறது.

அந்த வகையில் கடலூர் மாவட்டத்திற்குட்பட்ட புதுச்சத்திரம், பரங்கிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடலூர் மேற்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் டாஸ்மாக் கடைகளில் முதல்வர் மு.க. ஸ்டாலின்  படத்தை ஒட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் புதுச்சத்திரம் பகுதிகளில் உள்ள  2  டாஸ்மாக் கடைகளில் (டாஸ்மாக் கடை எண்கள் : 2526, 2539) மாவட்ட மகளிர் அணி செயலாளர் அர்ச்சனா ஈஸ்வர் தலைமையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் படம் ஓட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதேபோல் பாஜக மேற்கு மாவட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் முதல்வர் மு.க. ஸ்டாலின் படம் ஒட்டும் நிகழ்வு நடைபெற்றது. இதில் தமிழக அரசைக் கண்டித்து பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டது. பரங்கிப்பேட்டை ஒன்றிய தலைவர் சுரேஷ், மாவட்ட ஊடகப்பிரிவு செயலர் அன்பரசன், முன்னாள் ஒன்றிய செயலர் ராதாகிருஷ்ணன், ஒன்றிய துணைத் தலைவர் வெங்கடேசன், கிளைத் தலைவர் மணிகண்டன், பரந்தாமன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 

சார்ந்த செய்திகள்