சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. சபரிமலை கோவில் நடை வருகின்ற 17 ஆம் தேதி திறக்கப்படும் அன்று மாலையே பெண் ஐயப்ப பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக கேரள உயர்நீதிமன்றம் சபரிமலை கோவிலுக்கு வரும் பெண்களுக்காக என்னென்ன வசதிகள் எல்லாம் செய்திருக்கிறீர்கள், அந்த வசதிகளை உயர்நீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று கேரள உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், திருவிதாங்கூர் தேவசம் போர்டு இதுகுறித்து கேரள உயர்நீதிமன்றத்தில் தெரிவித்திருப்பதாவது: பம்பையிலும், சன்னிதானத்திலும் பெண்கள் ஓய்வு எடுக்க தனியாக இடம் ஒதுக்கப்படும். சன்னிதானத்தில் 100 பையோ டாய்லெட்கள் கட்டப்படும். மேலும் கட்டப்படும் 900 கழிப்பறைகளில் பெண்களுக்கு என்று 100 கழிப்பறகள் ஒதுக்கப்படும். பெண்கள் உடைமாற்றுவதற்கு என்று தனியே அறைகள் உருவாக்கப்படும் என்று அதில் தெரிவித்துள்ளனர்.