Skip to main content

நிபா வைரஸ் இல்லாத மாநிலமாக கேரளா! - அரசு அறிவிப்பு

Published on 14/06/2018 | Edited on 14/06/2018

கேரளாவில் எந்தப் பகுதியிலும் நிபா வைரஸ் இருப்பதற்கான அறிகுறிகள் இல்லை என கேரள அரசு அறிவித்துள்ளது. 
 

Nipha

 

 

 

கேரள மாநிலத்தில் நிபா எனும் உயிர்க்கொல்லி வைரஸின் அறிகுறிகள் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூளைக் காய்ச்சல் ஏற்பட்டு கடைசியில் மரணம் ஏற்படும் அபாயம் இருந்தது. இதனால், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளித்த செவிலியர் உட்பட 16 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால், கேரளாவிற்கு சுற்றுலா செல்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப் பட்டிருந்தது.
 

இந்நிலையில், கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பாதிப்புகள் முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளதாக கேரள அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கடந்த 21 நாட்களாக மாநிலத்தின் எந்த பகுதியிலும் நிபா பாதிப்பால் சிகிச்சைக்காக யாரும் அனுமதிக்கப்படவில்லை. எனவே, சுற்றுலாப்பயணிகள் தாராளமாக இங்கு பயணிக்கலாம் என தெரிவித்துள்ளார். 
 

 

 

அதேபோல், அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜாவும் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். இருப்பினும் ஜூலை 30 வரை காத்திருக்கலாம்; முழுமையான பாதுகாப்புக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக உழைத்த எதிர்க்கட்சியினர் உட்பட மருத்துவர்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக அறிவித்துள்ளார். 

 

சார்ந்த செய்திகள்