Skip to main content

மனைவியின் நடத்தையில் சந்தேகம்; கணவரின் வெறிச்செயல் - பதறிய குடும்பம்!

Published on 21/04/2025 | Edited on 21/04/2025

 

Husband commits a incident out of suspicion against his wife

உத்தரப்பிரதேசம் மாநிலம் ஷாஜகான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ராம் கோபால் - ராம்கோனி தம்பதியினர். இந்த தம்பதிக்கு 23 வயதில் ரசிதா என்ற மகனும், 16 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இதனிடையே மதுக்கு அடிமையான ராம் கோபால், தினந்தோறும் குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறாராம். இதனிடையே மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகப்பட்டு அவரை அடித்துத் துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் கடந்த 18 ஆம் தேதி இரவு ராம்கோனி இரவு உணவு அருந்திவிட்டு தனது மகன்களுடன் வீட்டில் உள்ள அறையில் படித்து  உறங்கியுள்ளார். அப்போது மதுபோதையில் திடீரென உள்ளே நுழைந்த ராம் கோபால் தனது கையில் வைத்திருந்த ஆசிட்டை மனைவியின் மீது வீசியுள்ளார். அதில் ராம்கோனி மற்றும் அவர் அருகே படுத்திருந்த இரு மகன்கள் மீது விழுந்து மூவரும் வலியில் கத்தி கூச்சலிட்டுள்ளனர். 

அலறல் சத்தம்கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தின வலியால் துடித்துக்கொண்டிருந்த மூவரையும் மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் படுகாயமடைந்த ராம்கோனிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் மனைவியின் மீது ஆசிட்டை வீசிவிட்டு தப்பி ஓடிய ராம்கோபாலை தீவிரமாக தேடி வருகின்றனர். 
 

சார்ந்த செய்திகள்