65வது தேசிய விருது விழா வியாழக்கிழமை டெல்லியில் நடைபெற்றது. ஆனால் இம்முறை குடியரசுத்தலைவர் பதினோரு பேருக்கு மட்டும்தான் விருதுகள் வழங்குவார் என்றும் மற்றவர்களுக்கான விருதுகளை தகவல் மற்றும் ஒளிபரப்புதுறை அமைச்சர் ஸ்மிர்தி இரானி வழங்குவார் என்றும் அறிவிக்கப்பட்டது.
இது மரபு மீறல் என்று குடியரசுத் தலைவருக்கு எதிராக போராட்டம் நடத்தி 70 திரைக்கலைஞர்களும் விழாவை புறக்கணித்தனர். குடியசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கிய பதினோரு நபர்களில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியும் ஒருவர்.
கடந்த ஆண்டு வெளியான 'மாம்' திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வழங்கப்பட்டது. இந்த விருதை ஸ்ரீதேவியின் இரண்டு மகள்களான ஜான்வி கபூர், குஷி மற்றும் போனிகபூர் ஆகியோர் குடியரசு தலைவரிடமிருந்து பெற்றுக்கொண்டனர். இதில் ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர், நடிகை ஸ்ரீதேவியின் சேலையை கட்டிவந்து விருதைப்பெற்றுக்கொண்டார். இந்த புடவையை நடிகர் ராம் சரணின் திருமணத்தில் ஸ்ரீதேவி கட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வு அனைவரையும் மனம் உருக வைத்தது.