Skip to main content

பாலியல் புகாருக்கு ஆளான பேராயர்... ஆதரவு அறிக்கை வெளியிட்ட சபை!  

Published on 14/09/2018 | Edited on 14/09/2018

கேரளாவில் பேராயர் மீது கன்னியாஸ்திரி கொடுத்த பாலியல் புகாரில் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாததை எதிர்த்து கன்னியாஸ்திரிகள் நடத்தும் போராட்டம் தொடரும் வேளையில் இன்று பேராயருக்கு ஆதரவாக அவர் சார்ந்த சர்ச் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி ஐந்து கன்னியாஸ்திரிகள் உட்பட ஒன்பது பேர் அந்தப் பேராயருக்கு எதிராக சதி செய்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

 

bishop franco



கோட்டயம் அருகே குருவிளங்காடு பகுதியில் உள்ள கான்வென்டில் கன்னியாஸ்திரியாக இருந்தவர் ஒருவர்  பஞ்சாப் மாநிலம், ஜலந்தர் தேவாலய பேராயர் பிராங்கோ மூலக்கல் மீது கடந்த ஜூலை மாதம் பாலியல் புகார் அளித்திருந்தார். அதில் 2014ஆம் ஆண்டிலிருந்து 2016ஆம் ஆண்டு வரை அந்தப் பாதிரியார் தன் விருப்பமின்றி 13 முறை பாலியல் வன்புணர்வு செய்திருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். எழுபத்தைந்து நாட்களைக் கடந்தும் நடவடிக்கையெதுவும் எடுக்கப்படவில்லையென்பதால் அவர் இந்தியாவுக்கான வேட்டிகன் தூதருக்கும் இந்திய கத்தோலிக்கப் பேராயர்களின் கூட்டமைப்பின் தலைவருக்கும் மேலும் கத்தோலிக்க அமைப்புகளைச் சேர்ந்த 21 முக்கிய பிரமுகர்களுக்கும் அந்தக் கடிதத்தை அனுப்பியுள்ளதாகத் தெரிவித்தார் அந்தக் கன்னியாஸ்திரி.

 

sisters in protest



"தனது பண பலத்தால் நடவடிக்கையிலிருந்து தப்பிக்கிறார்" என்று குற்றம் சாட்டிய அவர், '5 கோடி கொடுக்கிறேன், என் மீதான புகாரை திரும்பப் பெற்றுவிடு' என்று பேரம் பேசுவதாகவும் பேராயர் ஃபிரான்கோ மீது குற்றம் சாட்டினார். இதற்கு பதில் சொன்ன பேராயர், தன் மீது எந்தக் குற்றமும் இல்லையென்றும் அந்தக் கன்னியாஸ்திரியின் தவறான நடவடிக்கைக்காக அவரைக் கண்டித்ததால் தனக்கெதிராக ஆள் சேர்த்துக்கொண்டு சதி செய்வதாகக் குறிப்பிட்டார்.

கேரள கன்னியாஸ்திரிகள் அமைப்பும் பேராயருக்கு ஆதரவாகவே கருத்து தெரிவித்தது. இதனிடையே போலீஸ் விசாரணை திருப்திகரமாக இருப்பதாகத் தெரிவித்த நீதிமன்றம், 'உடனடி கைது நடவடிக்கையை விட, இறுதித் தீர்ப்பே முக்கியம்' என்றும் கூறியது. இந்நிலையில் ஜலந்தர் 'மிஷனரீஸ் ஆஃப் ஜீசஸ்' சபை அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருக்கிறது. கன்னியாஸ்திரிகளின் போராட்டம் தொடர்கிறது.        


     

 

சார்ந்த செய்திகள்

Next Story

கூட்ட நெரிசல் - சேதமடைந்த விஜய்யின் கார்

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
vijay car damage in kerala the goat movie shoot

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’. விஜய்யின் 68வது படமாக உருவாகி வரும் இப்படத்தில், மீனாட்சி சௌத்ரி, சினேகா, பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், லைலா, வைபவ், அரவிந்த் ஆகாஷ், விஜய் ராஜ், பிரேம் ஜி என நட்சத்திர பட்டாளங்கள் நடிக்கின்றனர். ஏ.ஜி.எஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக், கடந்த புத்தாண்டை முன்னிட்டு வெளியாகி வைரலானது. 

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, தாய்லாந்து, பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் நடந்தது. இது குறித்து சமீபத்திய நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய வெங்கட் பிரபு, “இந்த மாசத்துக்குள் கிட்டத்தட்ட க்ளைமாக்ஸ் முடிந்துவிடும். வெளிநாட்டில் 1 ஷெட்யூல் இருக்கு. அதோட மொத்த படப்பிடிப்பும் முடியுது. நிறைய பாடல்கள் படத்தில் இருக்கு. ஃப்ர்ஸ்ட் சிங்கிள் வெளியாக மே ஆகிடும்” எனப் பல்வேறு விஷயங்களை பகிர்ந்திருந்தார். இப்படத்தில் விஜய் ஒரு பாடல் பாடியுள்ளதாக யுவன் ஷங்கர் ராஜா சமீபத்திய இசை நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து த்ரிஷா இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாகவும், ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில், இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு கேரளாவில் நடைபெறுகிறது. இதற்காக இன்று விமானம் மூலம் கேரளாவிற்குச் சென்றார் விஜய். காவலன் படத்திற்குப் பிறகு 14 ஆண்டுகள் கழித்து கேரளாவிற்கு விஜய் செல்வதால், அவரை வரவேற்று போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. அவரை காண கேரள திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ஏராளமான ரசிகர்கள் குவிந்திருந்தனர். விஜய் வந்து இறங்கியதும் ஆர்ப்பரித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பின்பு ரசிகர்களுக்கு கையசைத்துவிட்டு போலீஸ் பாதுகாப்புடன் காரில் ஏறிச் சென்றார் விஜய். 

vijay car damage in kerala the goat movie shoot

அவர் வெளியில் செல்லும் போது நூற்றுக்கணக்கான ரசிகர்கள் காரை சுற்றி வளைத்துள்ளனர். அதனால் கூட்ட நெரிசலில் கார் சிக்கிக்கொண்டு நகர முடியாமல் தவித்தது. உள்ளே உட்கார்ந்திருந்த விஜய்யும் கொஞ்சம் தடுமாற்றம் அடைந்தார். ரசிகர்களின் நெருக்கத்தால் கார் கண்ணாடி உடைந்துள்ளது. மேலும் காரின் பின்பகுதி, முன்பகுதி எனப் பல இடங்களில் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இது தொடர்பான வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Next Story

பீட்டா அமைப்புடன் கூட்டணி - கோயிலுக்கு பிரம்மாண்ட பரிசு வழங்கிய பிரியாமணி

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Priyamani donate mechanical elephant to Kerala temple with peta

இந்தி, தெலுங்கு, மலையாளம் எனப் பல்வேறு மொழிகளில் பிஸியாகவுள்ளார் பிரியாமணி. கடந்த மாதம் இந்தியில் வெளியான ஆர்டிகிள் 370 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்போது மைதான், கன்னடத்தில் கைமாரா மற்றும் தமிழில் கொட்டேஷன் கேங் உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார்.

Priyamani donate mechanical elephant to Kerala temple with peta

இந்த நிலையில், பீட்டா அமைப்புடன் இணைந்து இயந்திர யானையை கோவிலுக்குப் பரிசாக வழங்கியுள்ளார் பிரியாமணி. கோவில்களில் யானைகள் துன்புறுத்தப்படுவதை தடுக்கும் விதமாக இயந்திர யானைகளை கோவில்களில் இடம்பெறச் செய்யும் புதிய திட்டத்தை பீட்டா அமைப்பு முன்னெடுத்து வருகிறது. இந்த முன்னெடுப்பில் அவர்களுடன் கைகோர்த்த பிரியாமணி, கேரளா கொச்சி அருகே உள்ள திருக்கயில் மகாதேவா கோவிலுக்கு, இயந்திர யானையை பரிசாக வழங்கி மகிழ்ந்துள்ளார். இந்த கோயிலில் யானைகளை சொந்தமாக வைத்திருக்கவோ அல்லது வாடகைக்கு எடுக்கவோ கூடாது என்ற முடிவை பின்பற்றி வருகிறார்கள். இயந்திர யானைக்கு மகாதேவன் எனப் பெயரிடப்பட்டுள்ளது. கேரளாவில் அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டாவது இயந்திர யானை இதுவாகும்.

இது குறித்துப் பேசிய அவர், “தொழில்நுட்பத்தின் முன்னேற்றம் என்பது விலங்குகளுக்கு தீங்கு விளைவிக்காமல் இருப்பதை உறுதி செய்வதன் மூலம் நமது வளமான கலாச்சார நடைமுறைகளையும் பாரம்பரியத்தையும் பராமரிக்க முடியும்” என்றுள்ளார்.