Skip to main content

ஜி.எஸ்.டி-ஐ கலாய்க்கும் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்!

Published on 28/09/2017 | Edited on 28/09/2017
ஜி.எஸ்.டி-ஐ கலாய்க்கும் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்!

ஜி.எஸ்.டி. என்ற வரி நாடு முழுவதும் கடந்த ஜூன் 31ஆம் தேதி நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டு, நடைமுறையில் உள்ளது. ஜி.எஸ்.டி. அமுல்ப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அதிகமாக கட்டணம் வசூலிக்கப்படுவதாக உணர்ந்த பொதுமக்கள் பலரும் ஜி.எஸ்.டி வசூலிக்காத உணவகங்கள் மற்றும் சிறுதொழில் மையங்களை நாடி வருகின்றனர். உணவகங்களில் ஒருவேளை சாப்பாட்டிற்கும் சேர்த்தே ஜி.எஸ்.டி பணம் வசூலிக்கப்படுவதாகவும் கருத்துகள் பகிரப்படுகின்றன.



இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் சுழல்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘உணவகத்தில் இரவு உணவை முடித்துவிட்டு பணத்தை செலுத்தும்போது, மத்திய - மாநில அரசுகள் நம்மோடு இரவு உணவில் கலந்துகொண்டதாகவே உணர்கிறேன்’ என வேடிக்கையாக பதிவிட்டுள்ளார்.  

சார்ந்த செய்திகள்