Skip to main content

முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உருக்கம்!

Published on 31/05/2019 | Edited on 31/05/2019

2014- ஆம் ஆண்டு ஆட்சி அமைத்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சராக  பாஜக கட்சியின் மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ் பதவி வகித்தார். இவர் பதவி வகித்த நாட்களில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நடவடிக்கைளை எடுத்தார். அதில் ஒரு பகுதியாக இந்திய வெளியுறவு துறை அமைச்சகத்திற்கென்று பிரத்யேக கணக்குகளை சமூக வலைத்தளங்களான பேஸ்புக், ட்விட்டரில் தொடங்கினார். அந்த கணக்குகளை நிர்வகிக்க அதிகாரிகளையும் நியமனம் செய்தார். இதன் மூலம் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் தங்களுக்கு ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டாலோ அல்லது பணிபுரியும் இடத்தில் ஏதாவது பிரச்சனைகள் ஏற்பட்டாலோ உடனடியாக சமூக வலைதளப்பக்கங்கள் மூலம்  இந்திய வெளியுறவு துறைக்கு தகவல் அனுப்பினால் போதும் 24 நேரத்தில் தீர்வு காணும் வகையில் உடனடி நடவடிக்கையை சுஷ்மா சுவராஜ் நேரடியாகவும், தூதரக அதிகாரிகள் மூலமும் மேற்கொண்டார்.

 

 

susma suwaraj

 

 

இதனால் உலகத்தில் உள்ள அனைத்து இந்தியர்களும் வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மாவை பாராட்டினர். ஏனெனில் எந்த நேரத்தில் புகார் வந்தாலும் அதை பகல் இரவு பாராமல் உரிய நபர்களுக்கு உடனடி தீர்வை பெற்று தந்துள்ளார் என்றால் எவராலும் மறுக்க முடியாது. மத்திய அமைச்சரவையில் மிக சிறப்பாக, மக்கள் எளிதில் சந்திக்க கூடிய வகையில் அமைச்சகத்தை செயல்பட  வைத்தவர். குறிப்பாக சொல்ல வேண்டுமானால், 2014-2019 ஆண்டுகளில் மக்களுக்காக 24*7 இயங்கிய அமைச்சகம், இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் ஆகும். அதே போல் சுஷ்மா சுவராஜுக்கு ஒத்துழைப்பு தரும் வகையில் வெளியுறவு துறை அதிகாரிகளும் சிறப்பாக பணியற்றினர். இந்நிலையில் நேற்று பதவி ஏற்ற பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் சுஷ்மா சுவராஜ் இடம் பெறவில்லை.

 

 

susma

 

 

இதற்கு காரணம் அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால அமைச்சரவையில் இடம் பெற விருப்பமில்லை என பிரதமரிடம் தெரிவித்து, தனது அமைச்சகத்தின் செயலாளர் எஸ்.ஜெய்சங்கரை  பரிந்துரை செய்தார். அதனைத் தொடர்ந்து வெளியுறவு துறை அமைச்சராக ஜெய்சங்கர் நேற்று பதவி ஏற்றார் . இந்த நிலையில் சுஷ்மா சுவராஜ்  தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடிக்கு உருக்கமாக நன்றி தெரிவித்து கருத்து பதிவிட்டுள்ளார். அதில் பிரதமர், தமக்கு கடந்த 5 ஆண்டுகள் வெளியுறவுத்துறை அமைச்சராக பணிப்புரிய வாய்ப்பு  வழங்கி மக்களுக்கு சேவை புரியும் வாய்ப்பை அளித்தார். இதற்காக பிரதமர் மோடிக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என உருக்கத்துடன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்