இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டியது.
இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, டெல்லி, தமிழகம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள மக்கள் கரோனா பாதிப்பால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மத்திய மற்றும் மாநில அரசுகள் கரோனா தடுப்பு நடவடிக்கைளை முடுக்கிவிட்டுள்ளனர்.
இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,352- லிருந்து 10,363 ஆக உயர்ந்துள்ளது. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 324- லிருந்து 339 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 980- லிருந்து 1,036 ஆக அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 2,334, தமிழகத்தில் 1,173, டெல்லியில் 1,510, ராஜஸ்தானில் 873, மத்திய பிரதேசத்தில் 604, உத்தரப்பிரதேசத்தில் 558, தெலங்கானாவில் 562, கேரளாவில் 379, ஆந்திராவில் 432, குஜராத்தில் 539, கர்நாடகாவில் 247 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1211 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும், 31 பேர் கரோனா பாதிப்பால் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.