தேர்தல் நெருங்குவதால் உத்தரப்பிரதேச மாநிலத்தில் அரசுத்துறை ஊழியர்கள் அடுத்த 6 மாதங்களுக்கு போராட்டம் மற்றும் வேலைநிறுத்தம் நடத்த கூடாது என உத்தரபிரதேச அரசு அறிவித்திருந்தது.இதற்காக அங்கு எஸ்மா சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த உத்தரவு அனைத்து அரசு ஊழியர்களிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தை போல, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி அடுத்த 7 நாட்களுக்கு மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்த உள்ளதாக உத்தரப்பிரதேச அரசு ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இந்த போராட்டத்தில் ஆசிரியர்கள், பொறியாளர்கள், தாசில்தார்கள் மற்றும் போக்குவரத்து துறை ஊழியர்கள் உட்பட சுமார் 40 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. ஊழியர்களின் இந்த போராட்டத்தால் உத்தரப்பிரதேச அரசு இயந்திரமே முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அரசியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அரசு ஊழியர்களின் இந்த போராட்டத்தை தடுத்து நிறுத்த உத்தரபிரதேச அரசு திணறி வருகிறது.