Skip to main content

நினைத்தபோதெல்லாம் புதையல் தரும் 'அட்சய பாத்திரம்'- தொழிலதிபரை ஏமாற்றி 2 கோடி அபேஸ்!  

Published on 12/02/2020 | Edited on 12/02/2020

புராண கதைகளில் நாம் கேள்விப்பட்டிருப்போம் ' அட்சய பாத்திரம்'. என்ற வார்த்தையை. அதாவது அள்ள அள்ள குறையாமல் பணம், உணவு பொருட்களை தரும் பாத்திரம் என்று கதைகளில் கேள்விப்பட்டிருப்போம். அப்படிபட்ட பாத்திரம் தன்னிடம் உள்ளதாகவும், நினைத்த போதெல்லாம் அந்த பாத்திரத்தில் பணம், தங்கம் புதையலாக வரும் என சதுரங்க வேட்டை திரைப்பட பாணியில் தொழிலதிபரை ஏமாற்றிய கும்பலை கைது செய்திருக்கிறது காவல்துறை.

 

police

 

திருப்பதி அருகில் உள்ள திருப்பத்தூர் என்ற இடத்தில் நடந்திருக்கிறது இந்த வினோத மோசடி. திருப்பதி, திருப்பத்தூரை சேர்ந்த தொழிலதிபர் நவீன் என்பவரிடம் வந்த கும்பல் ஒன்று தங்களிடம் அட்சய பாத்திரம் உள்ளதாகவும், நினைத்தபோதெல்லாம் அதில் பணம், நகை வரும் என கூறி அணுகியுள்ளனர். அதனை நிரூபிக்கும் வகையில் சித்தூர் அருகே நவீனை அழைத்து சென்று ஏற்கனவே மறைத்து வைக்கப்பட்டிருந்த பெட்டியில் சில நகைகளை எடுத்துக்காட்டி நம்ப வைத்துள்ளனர். இதை உண்மை என்று நம்பிய நவீன் குடிப்பள்ளி என்ற இடத்தில் வைத்து சுமார் 2.10  கோடி ரூபாய் கொடுத்து அந்த பெட்டியை வாங்கியுள்ளார்.

 

incident in thirupathi... police arrest


பூஜையில் வைத்து பின்னர் திறந்து பாருங்கள் என ஆருடம் கூறிவிட்டு மறைந்தது அந்த கும்பல். இதனை நம்பி பூஜையில் பெட்டியை தொழிலதிபர் நவீன் வைத்து விட்டு உள்ளே திறந்து பார்த்துள்ளார். ஆனால் உள்ளே ஒன்றும் இல்லை இதனால் அதிர்ந்து போன நவீன் அந்த பெட்டியை பல இடங்களில் வைத்து சோதனை செய்தும் பணம் நகை வராததால் பணம் கொடுத்த இடமான குடிப்பள்ளியில் உள்ள காவல்நிலையத்தில் புகார் செய்தார்.

 

police


இந்த வினோத புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார் தனிப்படை அமைத்து விசாரணையை தீவிரப்படுத்தி வந்த நிலையில், குடிப்பள்ளி ரயில்நிலையத்தின் அருகே 8 பேர் கொண்ட கும்பலை கைது செய்து, ஒவ்வொருவர் வீட்டிலும் இரண்டாயிடம், ஐநூறு ரூபாய் நோட்டுகள் என கட்டுக்கட்டாக பணத்தை பறிமுதல் செய்தனர். மொத்தம்  1.29 கோடி ரூபாய் ரொக்கம், இரண்டு கார்கள், ஒரு இருசக்கர வாகனம் என மொத்தமாக அவர்களிடம் பறிமுதல் செய்தனர்.

 

police


கிருஷ்ணகிரி சேகர், ராமச்சந்திரா, காஞ்சிபுரம் விநாயகம், கர்நாடகாவை சேர்ந்த 5 பேர் என மொத்தம் 8 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த நவீன காலத்திலும்   அட்சய  பாத்திரம் என ஒன்று இருப்பதாக நம்பி ஏமார்ந்த சம்பவம் சற்று அதிர்ச்சியைத்தான் கிளப்பியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்