Published on 17/10/2018 | Edited on 17/10/2018
![ii](http://image.nakkheeran.in/cdn/farfuture/kolKUjOPan4CGYLOdtj9qVDfrHbY25U9WIOqJBy5eoU/1539778014/sites/default/files/inline-images/icici-in-ew.jpg)
தனியார்துறை வங்கியான ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் நிர்வாக இயக்குனரும் தலைமை செயல் அதிகாரியுமான சாந்தா கொச்சர் தனது பதவியில் இருந்து இந்த மாதம் துவக்கத்தில் விடைபெற்றார். இவருக்கு பதிலாக சந்தீப் பாக்ஷி என்பவர் நிர்வாக இயக்குனராகவும் தலைமை செயல் அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டு. இவர் இந்தப் பதவியில் ஐந்து ஆண்டுகள் இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஆர்.பி.ஐ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி சந்தீப் பாக்ஷி ஐ.சி.ஐ.சி.ஐ-ன் இயக்குனராகவும் தலைமை செயல் அதிகாரியாகவும் மூன்று வருடங்களுக்கு இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.