Skip to main content

”எனக்கு முப்பது லட்சம் பணம் வேண்டும்” - பாதிக்கப்பட்ட ஜெட் ஏர்வேஸ் பயணி

Published on 21/09/2018 | Edited on 21/09/2018
mumbai


மும்பையிலிருந்து ஜெய்ப்பூர் செல்லும் விமானம் மும்பை உள்ளூர் விமாநிலையத்தில் இருந்து நேற்று காலை புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்திலேயே மும்பை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதால் பரப்பரப்பு ஏற்பட்டது. 
 

ஜெய்ப்பூருக்கு 166 பயணிகளுடன் விமானம் புறப்படும் போது, விமானத்தின் கேபின் பிரஸ்ஸர் பட்டனை அழுத்தி சரி செய்ய வேண்டும். ஆனால், விமானத்திலிருந்த குழு அதை சரியாக கவனிக்காமல் விட்டதால், விமானம் புறப்பட்ட சற்று நேரத்திலேயே அழுத்தம் ஏற்பட 30 பயணிகளுக்கு காதிலிருந்தும் மூக்கிலிருந்தும் இரத்தம் கசிய ஆரம்பித்தது. மேலும் சிலருக்கு அதிகப்படியான தலைவலி ஏற்பட்டுள்ளது. இதனால், உடனடியாக விமானம் புறப்பட்ட இடத்திற்கே திரும்பியது. 

 
இதுகுறித்து ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு முதல் உதவி செய்து வருகிறோம். 166 பயணிகளையும் மாற்று விமானம் மூலம் ஜெய்ப்பூருக்கு அழைத்துச் செல்கிறோம். விமான பயணிகளை அழைத்து சென்ற 5 விமான ஊழியர்களிடமும் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று அறிக்கை வெளியிட்டுள்ளது. 
 

இந்நிலையில், சிகிச்சைக்காக சிட்டி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ஐந்து பயணிகளில் ஒருவர், ”எனக்கு முப்பது லட்சம் பணமும், 100 உயர்வகுப்புக்கான வவுச்சரும் நஷ்ட ஈடாக வேண்டும்” என்று ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை வலியுறுத்தியுள்ளார். இது சட்டத்தில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இல்லையென்றால் அவரிடம் கேபினட் பிரஸர் பட்டனை சரிபார்க்காத வீடியோ இருக்கிறது. அதனை ஊடகங்களுக்கு தந்துவிடுவேன் என்று மிரட்டுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இந்த விபத்துக்கு காரணம் நிறுவனத்தின் மீது சட்டரீதியாகவும் வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  


 

சார்ந்த செய்திகள்

Next Story

வேலையிழந்த ஜெட் ஏர்வேஸ் ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மத்திய அரசு!

Published on 17/07/2019 | Edited on 17/07/2019

ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம் கடுமையான நிதி நெருக்கடியால், உள்நாட்டு விமான சேவை மற்றும் வெளிநாட்டு விமான சேவையை முற்றிலும் நிறுத்தியது. இதனால் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் பணியாற்றிய சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை இழந்துள்ளனர். அதே போல் விமான நிறுவனம் ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஆறு மாத ஊதியத்தை வழங்காத காரணத்தால், இந்த விமான ஊழியர்கள் டெல்லி, மும்பை ஆகிய இடங்களில் போராட்டம் நடத்தினர். மேலும் ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் டெல்லியில் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சரை நேரில் சந்தித்து, விமான நிறுவனம் வழங்க வேண்டிய நிலுவை தொகையை பெற்று தர வேண்டும் எனவும், வேலையிழந்த பணியாளர்களுக்கு வேலை வாய்ப்பை பெற்று தர வேண்டும் என கோரிக்கை விடுத்தன.

 

 

JET AIRWAYS EMPLOYEES JOBS RELATED ACTION UNION CIVIL AVIATION MINISTER ANNOUNCED

 

 


இதனையடுத்து வேலையிழந்துள்ள ஜெட் ஏர்வேஸ் ஊழியர்களின் ஒவ்வொருவரின் பெயரையும் அவர்கள் தகுதியுடன் பிற நிறுவனங்கள் பணிக்கு எடுக்கும் வகையில் பட்டியலிட்டு வருவதாகவும்,  இதற்காக புதிய இணையதளம் உருவாக்கப்பட்டு வேலையிழந்தவர்களின் பெயர்கள் பதிவேற்றம் செய்யப்படும் என மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். அதே போல் இந்தியாவில் விமான போக்குவரத்து துறையில் முன்னணியில் உள்ள நிறுவனமான இண்டிகோ மற்றும் ஸ்பைஸ் ஜெட் உள்ளிட்ட நிறுவனங்களிடம் வேலை வாய்ப்பு குறித்து பேசி வருவதாக கூறினார். ஏற்கனவே ஜெட் ஏர்வேஸ் ஊழியர்களுக்கு, இந்த நிறுவனங்கள் கணிசமான அளவில் வேலை வாய்ப்பை வழங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

Next Story

மீண்டும் எழும் 'ஜெட் ஏர்வேஸ்' நிறுவனம்...உற்சாகத்தில் ஊழியர்கள்!

Published on 29/06/2019 | Edited on 29/06/2019

ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம் பாரத் ஸ்டேட் வங்கி உள்ளிட்ட வங்கிகளில் பெறப்பட்ட ரூபாய் 25000 கோடி கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் சிக்கித்தவித்து வருகிறது. இதன் காரணமாக அந்நிறுவனம் தனது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவையை முற்றிலும் நிறுத்தியது. இந்த நிறுவனத்தில் பணியாற்றிய 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை இழந்தனர். அது மட்டுமல்லாமல் விமான ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஆறு மாத ஊதியத்தை வழங்காததால், ஊழியர்கள் டெல்லி மற்றும் மும்பையில் போராட்டம் நடத்தின.

 

 

JET AIRWAYS COMPANY AGAIN START FLIGHT SERVICE, EMPLOYEES INVEST ANNOUNCED

 

 

இந்நிலையில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் கடன் சுமையை சமாளிக்க அந்த நிறுவன ஊழியர்கள் மற்றும் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஆடி பார்ட்னர்ஸ் நிறுவனமும் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளன. ஆடி பார்ட்னர்ஸ் நிறுவனம் 49 சதவீதமும், ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் 26 சதவீதமும் என 75 சதவீதம் வரை முதலீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் மீண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.