கார் வாகன விற்பனையில் ஹூண்டாய் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி கியா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய சாதனை படைத்துள்ளது.
நாட்டில் நிலவும் பொருளாதார மந்தநிலை காரணமாக ஆட்டோமொபைல் சார்ந்த நிறுவனங்கள் கடும் நெருக்கடியை சந்த்தித்துள்ளனர். மேலும் அவ்வப்போது தொழிற்சாலைகளுக்கு விடுமுறை அளித்து வருகின்றனர். இதன் காரணமாக லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர
இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 22- ஆம் தேதி கியா கார் தயாரிப்பு நிறுவனம் "கியா செல்டாஸ்" என்ற பெயரில் புதிய காரை அறிமுகப்படுத்தியது. இந்த காருக்கான வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை இல்லாத வகையில் கார் முன்பதிவில் வரலாறு காணாத வகையில் செல்டாஸ் புதிய சாதனை படைத்துள்ளது. செல்டாஸ் அறிமுகமான 35 நாட்களில் சுமார் 40,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர். சமீபத்தில் வெளியான ஹூண்டாய் நிறுவனத்தின் வென்யூ கார் 60 நாட்களில் 50 ஆயிரம் முன்பதிவுகளைக் கண்டதே சாதனையாக இருந்தது. இச்சாதனையை தற்போது கியா செல்டாஸ் கார் முறியடித்துள்ளது.
![hyundai car manufacturing overtake in kia motors new achieved](http://image.nakkheeran.in/cdn/farfuture/pIIOWDCklxvLhRN2dIMYEeQ37ttsAqcUEZfeUTc3ALM/1569863531/sites/default/files/inline-images/Kia-Seltos-Walkaround-Video.jpg)
தற்போதைய சூழலில் 'கியா செல்டாஸ்' முன்பதிவு செய்தோருக்கான காத்திருப்புக் காலம் 2 மாதங்கள் ஆகும். ஆந்திரா மாநிலத்தில் உள்ள கியா தொழிற்சாலையில் கார் உற்பத்தி வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த தொழிற்சாலையில் மட்டும் மாதத்திற்கு சுமார் 10,000 கார் வரை உற்பத்தி நடைபெற்று வருகிறது. இந்தியாவில் ஒரே ஒரு கார் உற்பத்தி தொழிற்சாலையை வைத்திருக்கும் கியா நிறுவனம், இந்தியாவில் இரண்டாவது தொழிற்சாலையை தொடங்க தீவிரம் காட்டி வருகிறது.
மேலும் மாருதி சுஸூகி, டாடா, மஹிந்திரா, நிசான், ரெனால்ட், போர்ட் உள்ளிட்ட கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கு கடும் போட்டியாக உருவெடுத்துள்ளது கியா நிறுவனம்.