டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிப்பு செய்து, அம்மாநில அரசு உத்தரவு.
டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்று மாசு நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகரித்து வருகிறது. அதேபோல் டெல்லியை ஒட்டிய அண்டை மாநிலங்களான ஹரியானா, உத்தரப்பிரதேசம்,பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களின் விவசாயிகள், விவசாய கழிவுகளை எரிப்பதால் காற்று மாசுவின் குறியீடு 900 மேல் அதிகரித்திருந்தது. இதனால் மக்கள், நோயாளிகள், முதியவர்கள் என டெல்லி மக்கள் அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். காற்று மாசு காரணமாக அவ்வப்போது பள்ளிகளுக்கு விடுமுறையை அறிவித்து வந்த மாநில அரசு. தற்போது மேலும் இரு நாட்களுக்கு (நவ 14,15) பள்ளிகளுக்கு விடுமுறை என்று அறிவித்துள்ளது.
மாநில மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் பரிந்துரையை ஏற்று அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் நிலக்கரி பயன்பாடு கொண்ட தொழிற்சாலைகள் உள்ளிட்டவற்றை 15- ஆம் தேதி வரை மூடவும் மாசுக்கட்டுப்பாடு பரிந்துரை செய்துள்ளது.
டெல்லியை தொடர்ந்து உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஏற்பட்ட காற்று மாசு காரணமாக கவுதம புத்தா நகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நவ.14, 15- ஆம் தேதிகளில் விடுமுறை என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.