விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் இஸ்ரோவின் ககன்யான் திட்டத்திற்கு முன்னதாக ரோபோ ஒன்றை அனுப்பி சோதனை செய்யப்பட உள்ளது. இதற்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட ரோபோ இன்று அறிமுகப்படுத்தப்பட்டது.
![half humanoid 'Vyommitra' to be placed in the first unmanned mission of isro](http://image.nakkheeran.in/cdn/farfuture/Q6AzGm-2TQq_w3nG0AOryl0gQbd_qX0wTE19SIef6wo/1579685338/sites/default/files/inline-images/bfgxgfngf.jpg)
வரும் 2022 ஆம் ஆண்டு ககன்யான் திட்டம் மூலம் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்திற்காக இஸ்ரோ ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறது. இதற்காக நான்கு விண்வெளி வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ரஷ்யாவில் பயிற்சியளிக்கப்பட உள்ளது. இந்நிலையில், இதற்கான சோதனை முயற்சியாக ரோபோ ஒன்றை விண்ணுக்கு அனுப்ப இந்தியா இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
அந்தவகையில் விண்வெளிக்கு அனுப்பப்பட உள்ள அந்த ரோபோ இன்று பெங்களுருவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வயோமித்ரா எனும் மனித உருவிலான இந்த ரோபோ மனித உடலின் பெரும்பாலான செயல்பாடுகளை உருவகப்படுத்தும் வகையில் தயார் செய்யப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் மாதம் இந்த ரோபோ விண்வெளிக்கு அனுப்பப்பட்டு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.