Skip to main content

ஹத்ராஸ் சம்பவம்... உ.பி அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

Published on 01/10/2020 | Edited on 01/10/2020

 

Hadras incident ... Court issues notice to UP government

 

உத்தரப்பிரதேச மாநிலம், ஹத்ராஸ் மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது பெண் ஒருவர் கடந்த 14 -ஆம் தேதி நான்கு பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, நாக்கு வெட்டப்பட்டு, முதுகெலும்பு முறிந்த நிலையில், டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அந்தப் பெண் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது கொலை சம்பவத்தில் ஈடுபடல் மற்றும் கூட்டுப் பாலியல் வன்கொடுமை ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், பெண்ணின் உடலை போலீஸார் கட்டாயப்படுத்தி இரவோடு இரவாக தகனம் செய்ய வைத்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் நாடு முழுவதும் இந்தச் சம்பவத்திற்குக் கண்டனக் குரல்கள் எழுந்து வருகிறது.

இந்நிலையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் உத்திரபிரதேச அரசுக்கு தாமாக முன்வந்து நோட்டீஸ் அனுப்பியுள்ளது அகமதாபாத் உயர்நீதிமன்றம்.

 

 

 

சார்ந்த செய்திகள்