Skip to main content

பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்காக அழிக்கப்படும் ஆயிரக்கணக்கான மரங்கள்...

Published on 14/01/2019 | Edited on 14/01/2019

 

fgnx

 

பிரதமர் மோடியின் வருகைக்கான ஏற்பாட்டின் போது சுமார் 1000 மரங்கள் வெட்டப்பட்டுள்ள சம்பவம் ஒடிசாவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, குர்தா-பாலிங்கர் இடையிலான ரயில் போக்குவரத்தை தொடங்கி வைத்து பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள நாளை ஒடிசா வருகிறார். மேலும் அவர் அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை பொதுமக்களுக்கு வழங்கவுள்ளார். இந்நிலையில் பிரதமா் மோடி நாளை  ஹெலிகாப்டரின் மூலம் ஒடிசா வரும் நிலையில், அவரது ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்காக பிரத்தியேக ஹெலிபேட் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிக்காக ரயில்வே சார்பில் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்த 2.26 ஹெக்டரில் உள்ள 1000க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டி அழிக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்விற்கு பல தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

 

 

சார்ந்த செய்திகள்