ஆந்திர மாநிலத்தில் வரும் அக்டோபர் 1- ஆம் தேதி முதல் அரசு மதுபானக் கடைகள் செயல்படும் என்று கலால் மற்றும் சுங்கத்துறை அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.
ஆந்திர மாநில முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜெகன்மோகன் ரெட்டி, அரசு நிர்வாகத்தில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக டெண்டர் மூலம் தனியாருக்கு மதுக்கடைகள் மற்றும் பார் உரிமம் வழங்கப்பட்டு வந்த நடைமுறையை மாற்றியுள்ளார். அதேபோல் புதிய கலால் சட்டத்தில் சில திருத்தங்களை மேற்கொண்டுள்ளார்.
அதன்படி, ஆந்திர மாநிலத்தில் அக்டோபர் 1- ஆம் தேதி முதல் அரசு மதுபானக் கடைகள் இயங்கும் என்றும், மாநிலம் முழுவதும் முழுவதும் 3,500 மதுபானக்கடைகள் இயக்கப்படும் என்று கலால் மற்றும் சுங்கத்துறை அமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
மதுக்கடைகளின் வேளை நேரம் காலை 10.00 மணி முதல் இரவு 09.00மணி வரை மட்டுமே மதுக்கடைகள் திறந்திருக்கும். மேலும் பார்கள் 11 மணி வரை இயக்கப்படுகிறது. இதன் நேரத்தை குறைக்க ஆலோசிக்கப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக கோயில், தேவாலயம், மசூதி, பள்ளிக்கூடம், கல்லூரி, மடாலயம் போன்றவற்றிற்கு அருகே மதுக்கடைகள் இருக்கக் கூடாது. மதுக்கடைகள் மக்களுக்கு இடையூறாக இருக்கும் பட்சத்தில், உடனடியாக அகற்றப்படும் என்றும், இது தொடர்பாக மக்கள் அரசுக்கு புகார் அளிக்கலாம் என்று கூறினார்.