அரசியலில் பெண்கள் தனக்கென்று ஒரு தனித்துவத்தையும், அதிகாரத்தையும்,நிர்வாக திறமையும் கொண்டுள்ளனர்.அதற்கு எடுத்துக்காட்டாக மாநில மற்றும் மத்திய அரசியலில் நிறைய பெண் அரசியல்வாதிகள் இருந்துள்ளனர் நடைமுறையிலும் இருக்கின்றனர்.உதாரணமாக இந்திரா காந்தி,சோனியா காந்தி,ஜெயலலிதா,மாயாவதி,மம்தா பானர்ஜி என பல பெண் அரசியல்வாதிகள் தனக்கென்று ஒரு அடையாளத்தை வைத்துள்ளனர்.
இவர்களின் ஆளுமை,அரசியல் வாழ்க்கையை தவிர இவர்கள் அணியும் உடை, தோற்றம் என அனைத்திலும் ஒரு கம்பீரம் மற்றும் எளிமையை பின்பற்றுகின்றனர்.இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி குறித்து தினமும் தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகிறது, காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தியின் பிரச்சாரம் மற்றும் அவரது புடவையின் தோற்றம் மக்களிடையே வரவேற்ப்பை பெற்றுள்ளது. காட்டன் சேலையோ அல்லது பச்சை நிற சேலையோ அல்லது கைத்தறி சேலையோ பிரியங்கா காந்தி தேர்ந்தெடுக்கும் சேலையின் வண்ணத் தேர்வு மிகவும் நன்றாக இருப்பதாக பெண்கள் மத்தியில் பேசப்படுகிறது. மேலும் பிரியங்கா காந்திக்கு முன்பு, தென்னிந்தியாவில் ஆளுமைமிக்க தலைவர்களில் ஒருவரான செல்வி ஜெயலலிதா பெரும்பாலும் பச்சை புடவைகளில் காணப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியங்கா காந்தியின் புடவைத் தேர்வு மிகவும் எளிமையானதாகவும், அதேவேளையில் கம்பீரமானதாகவும் காணப்படுகிறது என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.தமிழகத்தின் முன்னால் முதல்வர் செல்வி ஜெயலலிதா அணியும் பச்சை கலர் புடவை போல பிரியங்காவும் அணிந்து வருகிறார் என சமூக வலைதளங்களில் விவாதித்து வருவதாக செய்திகள் வருகின்றன.பிரியங்காவின் சேலை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.