கௌரி லங்கேஷ் படுகொலை குறித்து துப்பு கொடுத்தால் பரிசு!
மூத்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷின் படுகொலை குறித்த தகவல் தெரிவிப்பவருக்கு ரூ.10 லட்சம் பரிசாக கொடுக்கப்படும் என கர்நாடக உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தீவிர இந்துத்துவ எதிர்ப்பாளரும், வலதுசாரிகளை நேரடியாக விமர்சித்து வந்தவருமான கௌரி லங்கேஷ், கடந்த செவ்வாய்க்கிழமை பெங்களூருவில் உள்ள அவரது வீட்டில் வைத்து, 3 மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். அவரது கொள்கைகளாலும், சமூக செயல்பாடுகளாலும் பலமுறை கொலைமிரட்டப்பட்டவர் கௌரி லங்கேஷ்.
அவரது படுகொலையில் சதி இருப்பதாக கர்நாடக சட்டத்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். பின்னர், அவரது கொலை குறித்து விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுப் பிரிவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கௌரி லங்கேஷ் கொலை குறித்து தகவல் கொடுத்தால், ரூ.10 லட்சம் சன்மானமாக வழங்கப்படும் என கர்நாடக உள்விவகாரத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மூத்த எழுத்தாளர் கல்புகர்கி கொலைகுறித்து எந்தவிதமான தகவலும் கிடைக்காதது குறிப்பிடத்தக்கது.
- ச.ப.மதிவாணன்