Skip to main content

முதல் தடுப்பூசியை பிரதமர் மோடி செலுத்திக்கொள்ள வேண்டும்  - காங்கிரஸ் கோரிக்கை!

Published on 06/01/2021 | Edited on 06/01/2021

 

ajit sharma

 

இந்தியாவில் ‘கோவிஷீல்ட்’ மற்றும் ‘கோவாக்சின்’ தடுப்பூசிகளுக்கு அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்தியாவில், மிகப்பெரிய தடுப்பூசி செலுத்தும் திட்டம் விரைவில் தொடங்க இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

 

இந்நிலையில் பீகார் காங்கிரஸ் தலைவர் அஜித் சர்மா, முதல் தடுப்பூசியைப் பிரதமர் மோடி செலுத்திக்கொண்டு மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

 

இதுதொடர்பாக அவர், "புதிய ஆண்டில் இரண்டு தடுப்பூசிகள் கிடைத்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், ஆனால் இதுகுறித்து மக்களிடையே சந்தேகம் உள்ளது. இந்த சந்தேகத்தை நீக்கும் வகையில் ரஷ்யாவிலும் அமெரிக்காவிலும், அந்த நாட்டின் தலைவர்கள் முதல் தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டனர். பிரதமர் நரேந்திர மோடியும், மூத்த பாரதிய ஜனதா தலைவரும் முதலில் தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டு மக்களின் நம்பிக்கையை வெல்ல வேண்டும்" என கூறியுள்ளார்.

 

மேலும் “இரண்டு தடுப்பூசிகளுக்கும் பெயர் வாங்க பாஜக முயற்சிக்கிறது. ஆனால் கொரோனா வைரஸ் தடுப்பூசியைத் தயாரித்த சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா மற்றும் பாரத் பயோடெக் ஆகிய இரு நிறுவனங்களும் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் நிறுவப்பட்டவை. எனவே மக்கள் காங்கிரஸ் கட்சிக்கும் வாழ்த்துகளையும், நற்பெயரையும் வழங்க வேண்டும்" என்று அஜித் சர்மா தெரிவித்துள்ளார். 

 

சார்ந்த செய்திகள்